கோவையில் இறந்த தந்தையின் உடலைத் தோண்டி எடுத்து நகையைத் திருடிய மகனால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையின், சௌரி பாளையம், பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் குமார் (வயது 32). இவரது தந்தை நாகராஜ் உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் 6-ஆம் தேதி இறந்தார். உறவினர்கள் அவரது உடலை சௌரி பாளையம் மயானத்தில் அடக்கம் செய்தனர். அப்போது நாகராஜின் கழுத்தில் மீன் டாலர் பதிக்கப்பட்ட 3¼ பவுன் தங்கச் சங்கிலி அணிவிக்கப்பட்டு இருந்தது. உடல் புதைக்கப்படும் போது நாகராஜின் மற்றொரு மகனான சக்திவேலும் அங்கு இருந்து உள்ளார்.
இந்த நிலையில், தந்தையின் 16-ஆம் நாள் காரிய சடங்கிற்காகப் புதைகுழியைத் தூய்மை செய்ய வெங்கடேஷ் குமார் கடந்த 19-ஆம் தேதி மயானத்திற்குச் சென்றார். அப்போது புதைகுழி தோண்டப்பட்டு, மீண்டும் மண்ணால் மூடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதில் சந்தேகம் அடைந்த அவர், மயானத்தில் வழக்கமாகத் தூங்கும் கார்த்தி என்பவரிடம் விசாரித்தார்.
விசாரணையில், கடந்த 16-ஆம் தேதி நள்ளிரவில் சக்திவேல் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் மயானத்திற்குள் புகுந்து, நாகராஜின் உடலைத் தோண்டி எடுத்து, கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைத் திருடியது தெரிய வந்தது.
மேலும், அந்தச் சங்கிலியைப் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள கடையில் விற்று உருக்கியதும் தெரிய வந்தது. இதுகுறித்து, பீளமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சக்திவேல் மற்றும் மணிகண்டனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
A sensation was caused in Coimbatore by a son who dug up his deceased father's body and stole jewelry.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சடலத்தைத் தோண்டி எடுத்து தங்கச் சங்கிலி திருட்டு

தியாகத்தின் உருவம்!
பெருந்துறை அருகே காப்பா் ஒயா் திருடிய மூன்று போ் கைது
சுத்தமல்லி அருகே ஆடு திருடிய 3 போ் கைது
விடியோக்கள்

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை


