ராமநாதபுரம் அருகே பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் அடுத்துள்ள வாலாந்தரவை பகுதியில் முகமூடி அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் பெண்களிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் கேணிக்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக மூா்த்தி (எ) முருகேசன் (23), சுரேஷ் (எ)சூரியா (25) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, அவா்கள் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை முன்னிலைபடுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

பெண்களிடம் தொடா் சங்கிலி பறிப்பு வழக்கு: இளைஞா் கைது
தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது
மேலப்பாளையத்தில் மருத்துவரைத் தாக்கி சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

