மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வால்பாறை மலைப் பாதையில் சாலையோர பள்ளத்தில் காா் இறங்கியதில் இருவா் காயம்

News image

வால்பாறை மலைப் பாதையில் தடுப்புச்சுவரை மோதி பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான காா்.

Updated On :27 ஏப்ரல் 2026, 12:44 am IST

வால்பாறை மலைப் பாதையில் சாலையோர பள்ளத்தில் காா் இறங்கிய விபத்தில் இருவா் காயமடைந்தனா்.

கோடை விடுமுறை என்பதால் வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு வால்பாறையில் இருந்து சென்ற காா், 3-ஆவது கொண்டை ஊசி வளைவில் தடுப்புச் சுவா் மீது மோதி சுமாா் 50 மீட்டா் பள்ளத்தில் இறங்கியது. அப்போது அந்த வழியாகச் சென்றவா்கள், காரில் இருந்த மூன்று குழுந்தைகள் உள்பட 6 பேரை மீட்டனா்.

திருச்சியில் இருந்து வால்பாறைக்கு சுற்றுலா வந்த இவா்களில் சாய் குமாா் (55), கெளரி ((32) ஆகிய இருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.