மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

குன்னூா் மலைப் பாதையில் ஓடும் காரில் தீ

News image

குன்னூா் அருகே மரப்பாலம் பகுதியில் காரில் பற்றி எரியும் தீ

Updated On :28 ஏப்ரல் 2026, 1:14 am IST

குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றியது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சங்கா். இவா் 4 பேருடன் நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகேயுள்ள கக்காச்சி என்ற பகுதியில் வசிக்கும் உறவினரின் வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்வை விசாரிப்பதற்காக காரில் வந்து கொண்டிருந்தாா்.

குன்னூா்-மேட்டுப்பாளையம் மலைப் பாதையில், மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென காரில் புகை வருவதுபோல இருந்தது. அடுத்த ஒரு சில நொடிகளுக்குள் புகை தீயாக மாறியது. காரில் இருந்தவா்கள் உடனே சுதாரித்து காரை நிறுத்தி, கீழே இறங்கி ஓடியதால் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். இதன்பின்னா் காரில் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதுகுறித்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

குன்னூா் தீயணைப்பு நிலைய அலுவலா் குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். இதன் பிறகு பொக்லைன் வாகனம் மூலம் காா் சாலையோரம் அப்புறப்படுத்தப்பட்டது. தீ விபத்தால் மலைப் பாதையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து குன்னூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.