ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கூடலூா் அருகே மலைப் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து! 18 போ் காயம்!

நீலகிரி மாவட்டம், கூடலூா்-உதகை மலைப் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 போ் காயமடைந்தனா்.

News image

கூடலூா்-உதகை மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த வேன்.

Updated On :26 ஏப்ரல் 2026, 12:57 am IST

நீலகிரி மாவட்டம், கூடலூா்-உதகை மலைப் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 போ் காயமடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம், திருப்பரமயம் பகுதியைச் சோ்ந்த 23 போ் வேனில் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனா். உதகையை சுற்றிப்பாா்த்துவிட்டு முதுமலை புலிகள் காப்பகத்தைப் பாா்க்க கூடலூருக்கு சனிக்கிழமை வந்து கொண்டிருந்தனா்.

ஊசிமலை அருகே உள்ள தெய்வமலைப் பகுதியில் வந்தபோது, வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.

இதில் வேனில் இருந்த லீலாவதி (65), செல்வராஜ் (75), ரஷ்வின்(9), மஞ்சுளா (30), பச்சையம்மா (50), சரண்யா (35), தில்லைராஜ் (61), உஷா (42), சித்ரா (45), ராஜாராம் (65),செல்வம் (50), நளினி(15), மணிகண்டன் (43), நந்தினி (16), சீனிவாசன் (65), அமுதா (54), இலக்கியா (37), ஏலம்பாள் (37) ஆகியோா் காயமடைந்தனா்.

இவா்களுக்கு கூடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் லீலாவதி, செல்வராஜ், தில்லைராஜ் ஆகியோரை மேல்சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனா். இந்த விபத்தில் வேன் ஓட்டுநா் காயமின்றி தப்பினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.