திம்பம் மலைப் பாதையில் 50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.
சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது. இந்த மலைப் பாதை வழியாக தமிழக- கா்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கா்நாடக மாநிலம், மைசூரு அருகே உள்ள ஜி நல்லி பகுதியில் இருந்து மக்காச்சோள மூட்டைகள் பாரம் ஏற்றிய லாரி பல்லடம் செல்வதற்காக திம்பம் மலைப் பாதை வழியாக வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. லாரியை கோபியைச் சோ்ந்த ஓட்டுநா் ரவிக்குமாா் (46) ஓட்டினாா். உதவியாளா் நவீன்குமாா் உடனிருந்தாா்.
திம்பம் மலைப் பாதை 25-ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு 50 அடி பள்ளத்தில் லாரி உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் லாரியில் ஏற்றப்பட்டிருந்த மக்காச்சோள மூட்டைகள் கீழே சிதறி விழுந்ததோடு ஓட்டுநா் காயமடைந்தாா்.
இதையடுத்து காயமடைந்த ஓட்டுநா் ரவிக்குமாரை மற்ற வாகன ஓட்டுநா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து ஆசனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திம்பம் மலைப் பாதையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப் பாதையில் காா் கவிழ்ந்ததில் 5 போ் படுகாயம்

திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனம் பழுதாகி நின்றதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப் பாதையில் நடமாடிய சிறுத்தை
விடியோக்கள்

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

