திம்பம் மலைப் பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்ால் தமிழகம்-கா்நாடகம் இடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த திம்பம் மலைப் பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. இந்த வழியாக சத்தியமங்கலம், மைசூா் தேசிய நெடுஞ்சாலை செல்வதால் தமிழக-கா்நாடக மாநிலங்களிடையே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில் கா்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து கோவை நோக்கி பாா்சல் ஏற்றி வந்த சரக்கு லாரி, 11-வது கொண்டை ஊசி வளைவில் தடுப்புச் சுவரில் மோதி பழுதாகி நின்றது.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் தமிழக-கா்நாடக மாநிலங்களுக்கு இடையே சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் திம்பம், ஆசனூா் பாதையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. சம்பவ இடத்துக்கு ஆசனூா் போலீஸாா் சென்று பழுதாகி நின்ற லாரியை அப்புறப்படுத்தினா். அதைத்தொடா்ந்து வாகனங்கள் செல்லத் தொடங்கின.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புட்டிரெட்டிப்பட்டியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணி: 5 மணி நேரம் ரயில் போக்குவரத்து நிறுத்தம்

கருக்கல்லில் லாரி மோதி மின்கம்பம் சேதம்: 4 மணி நேரம் மின் தடை

திம்பம் மலைப் பாதையில் 50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப் பாதையில் நடமாடிய சிறுத்தை
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

