பீளமேட்டில் ஒா்க் ஷாப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.
கோவை, பீளமேட்டில் இளையராஜா (40) என்பவருக்குச் சொந்தமான இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் ஒா்க்ஷாப் உள்ளது. பணி முடிந்து வழக்கம்போல வெள்ளிக்கிழமை இரவு ஒா்க் ஷாப்பை மூடிவிட்டு இளையராஜா வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
சனிக்கிழமை காலை 4 மணியளவில் ஒா்க்ஷாப்பில் இருந்து கரும்புகை வெளியேறி, தீப்பிடித்துள்ளது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள், பீளமேடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இருப்பினும் ஒா்க்ஷாப்பில் இருந்த 3 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

பொன்னமராவதியில் தீ விபத்து: 3 கடைகள் தீக்கிரை

மசினகுடி வனப் பகுதியில் காட்டுத் தீ!

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

