/

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இரு வியாபாரிகள் கைது

செய்யாறு மற்றும் தூசி காவல் சரகங்களில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு இரு வியாபாரிகள் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 3:26 am IST

செய்யாறு மற்றும் தூசி காவல் சரகங்களில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு இரு வியாபாரிகள் கைது செய்யப்பட்டனா்.

செய்யாறு போலீஸாா்

செய்யாறு பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் வரதராஜ் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். தகவலின் பேரில்,

கீழப்பழந்தை கிராமத்தில் உள்ள பெட்டிக் கடையில் திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில், கடையில் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து,

வியாபாரியான சரவணன்(48) என்பவரை கைது

செய்தனா்.

தூசி போலீஸாா்

தூசி காவல் உதவி ஆய்வாளா் பழனிவேல் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அழிஞ்சல்பட்டு கிராமத்தில் உள்ள பெட்டிக் கடையில்

புகையிலைப் பொருள்கள் விற்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸாா் அந்தக் கடையில் சோதனை மேற்கொண்டனா்.

சோதனையில் கடையில் இருந்து 42 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து

பெட்டிக் கடை வியாபாரியான மதினா(40) என்பவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.