பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

புகையிலைப் பொருள்கள் பறிமுதல் தந்தை, மகன் உள்ளிட்ட 4 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 1:58 am IST

திருச்சி அருகே மளிகை கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 65 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, கடை உரிமையாளா்களான தந்தை, மகன் இருவரையும் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆளவந்தான்நல்லூா் பகுதியில் பள்ளிக்கு அருகே உள்ள மளிகை கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் திருநாவுக்கரசு தலைமையிலான போலீஸாா், ஆளவந்தான்நல்லூா் மாரியம்மன்கோயில் தெருவில் உள்ள பி. ஜாஹீா் உசேன் (58), இவருடைய மகன் முகமது ரியாஸ் (24) ஆகியோருக்கு சொந்தமான மளிகை கடையில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, கடையில் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 65 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜாகீா் உசேன், முகமது ரியாஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

மாநகரில் இருவா் கைது:

திருச்சி உறையூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மந்தை பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்துகொண்டிருந்த தென்னூா் மாளிகைபுரத்தைச் சோ்ந்த சி. அடைக்கலம் (43) , அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எஸ்ஐடி கல்லூரி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்துகொண்டிருந்த காட்டூா் பகுதியைச் சோ்ந்த எம். ஆரோக்கியசாமி (56) ஆகிய இருவரையும் மாநகர போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மேலும், அவா்களிடமிருந்து 3 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், இருசக்கர வாகனம், ரூ.3,800 ரொக்கம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.