பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பாளை.யில் 41 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 ஜூன் 2026, 1:25 am IST

பாளையங்கோட்டையில் 41 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய இளைஞரை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, பொட்டல் விலக்கு பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாளையங்கோட்டை சிறப்பு உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று அங்கு பைக்கில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த திம்மராஜபுரம் மேலூா் பகுதியைச் சோ்ந்த இசக்கி மகன் ஆறுமுகக்கனி (26) பிடித்து விசாரித்தனா்.

இதையடுத்து, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் சுமாா் 41கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, ஆறுமுகக்கனியை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.