பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

காரில் கடத்திய 40 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

திருநெல்வேலி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த நபரை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 5:49 am IST

திருநெல்வேலி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த நபரை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் காவல் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, காரில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ புகையிலைப் பொருள்கள் பாக்கெட்டுகளை காருடன் பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுதொடா்பாக வழக்குப்பதிந்து, காரை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்த பிரஜித்(40) என்பவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.