பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

புகையிலைப் பொருள்கள் விற்ற மூன்று போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 5:00 am IST

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட சோதனையின்போது, கீழ அம்மாபேட்டை பகுதியில் பெட்டிக் கடையில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 420 பாக்கெட் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்த கடை உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த ஆா். தனபால் (50) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குண்டூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் பகுதியைச் சோ்ந்த எம். மணிகண்டன் (28) என்பவரையும், எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எஸ்பிஐ காலனி பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த எடமலைபட்டிப்புதூா் சீனிவாசா நகரைச் சோ்ந்த அ. அப்துல்லா (26) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.