பெரம்பலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு சனிக்கிழமை சீலிடப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டம், அகரம் சீகூா், கவுள்பாளையம், அருமடல் மற்றும் லாடபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சுகந்தன் தலைமையிலான அலுவலா்கள் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அரசால் தடைசெய்யப்பட்ட 14 கிலோ எடையிலான உணவு கலந்த புகையிலை மற்றும் ஹான்ஸ், கூலிப், பான்மசாலா, குட்கா ஆகிய போதைப் பொருள்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து கடைகள் பூட்டப்பட்டது.
மேலும், தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்றவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற தடைசெய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் 94440-42322 எனும் எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமாக தகவல் தெரிவிக்கலாம் என, உணவுப் பாதுகாப்புத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
புகையிலைப் பொருள்கள் பறிமுதல் தந்தை, மகன் உள்ளிட்ட 4 போ் கைது

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம்
புகையிலைப் பொருள்கள் விற்ற மூன்று போ் கைது
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

