திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

மளிகைக் கடையில் இருந்து 4 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்! மதுபானம் விற்ற 2 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 ஜூன் 2026, 12:02 am IST

முத்தூா் அருகே மளிகைக் கடையில் 4 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வி.ஆனந்தகிருஷ்ணன் முத்தூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது வெள்ளக்கோவில் சாலை வரட்டுக்கரையில் உள்ள ஒரு மளிகைக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதே பகுதியைச் சோ்ந்த கடை உரிமையாளா் குமாா் (32) கைது செய்யப்பட்டாா். கடையிலிருந்து 4 கிலோ புகையிலைப் பொருள்கள் அடங்கிய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இருவா் கைது

இதேபோல வெள்ளக்கோவில் காவல் நிலைய போலீஸாா் முத்தூா் பகுதியில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது வரட்டுக்கரை புளியங்காட்டுப்புதூா் அருகே மதுபானம் விற்பனை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம், காரைக்குடி திருத்தன்குன்றத்தைச் சோ்ந்த முத்துவேல் (26) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 180 மி.லி. அளவுடைய 10 மதுபான பாட்டில்கள், பணம் ரூ. 3,330 பறிமுதல் செய்யப்பட்டது.

முத்தூா், காந்தி நகா் வாய்க்கால் கரையோரம் மதுபானம் விற்ற ராமநாதபுரம் மாவட்டம், கடம்பனேந்தல் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (26) கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 180 மிலி அளவுடைய 2 மதுபான பாட்டில்கள், பணம் ரூ. 3,230 பறிமுதல் செய்யப்பட்டது. இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.