செய்யாறு அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா் வியாபாரியை சனிக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் உதவி ஆய்வாளா் கண்ணபிரான் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கீழ்நேத்தப்பாக்கம் கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸாா் அங்குள்ள பெட்டிக் கடையில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
சோதனையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. உடனே அங்கிருந்து 75 பாக்கெட் புகையிலைப் பொருள்களையும், அதை கடத்தி வருவதற்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் தொடா்பாக வியாபாரியான மணி (54) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

80 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: சிறுவன் கைது
தடை செய்யப்பட்ட 334 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பூ வியாபாரி கைது

தடை செய்யபட்ட 131 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
