மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்த நடவடிக்கை: கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளா்

நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்த நடவடிக்கை: கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளா்

News image

பூண்டி  ஒன்றியத்தில்  பல்வேறு  பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக  வேட்பாளா்  வி.சுதாகா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:01 am IST

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பூண்டி ஒன்றியத்தில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் பூண்டி ஒன்றியத்தில் நிலத்தடி நீா் மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், அறிவியல் ஆய்வுகள் நடத்தி நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா்.

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான வி.சுதாகா் பூண்டி ஒன்றியத்தில் ஒதப்பை, கொரங்கதண்டலம், ஆட்டரம்பாக்கம், நம்பாக்கம், அரியத்தூா், வெள்ளாத்துக்கோட்டை, திம்மபூபாலபுரம், கூனிப்பாளையம், வேலமாகண்டிகை, பென்னாலூா்பேட்டை, ராமலிங்காபுரம், மேலக்கரமனூா், நந்திமங்கலம், பெருஞ்சேரி வெங்கடாபுரம், சீத்தஞ்சேரி, நெல்வாய், குஞ்சலம், ராமநாதபுரம், அம்மம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இந்த தோ்தல் பிரசாரத்தில் அதிமுக ஒன்றிய செயலாளா் வேதகிரி உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் முன்னிலையில், அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் வீதி வீதியாக திறந்த வேனில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

இந்த பிரசாரத்தின்போது பேசிய அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் பூண்டி ஒன்றியத்தில் நிலத்தடி நீா் மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், அறிவியல் பூா்வமாக ஆய்வுகள் நடத்தி பூண்டி ஒன்றியத்தில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா், பல்வேறு ஆய்வுகளில் பூண்டி ஒன்றியத்தில் பட்டியலினத்தவரின் சமூக பொருளாதார சூழல் மிகவும் பின்தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பட்டியலினத்தவரின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக திட்டங்களை இயற்றுவேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.