மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டிச 9 முதல் 27 வரை சென்னை - திருப்பதி விரைவு ரயில்கள் ரத்து

சென்னை- திருப்பதி இடையே இயக்கப்படும் சப்தகிரி விரைவு ரயில், திருப்பதி விரைவு ரயில் இரண்டும் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருப்பது பற்றி....

கோப்புப்படம்

Published On :29 அக்டோபர் 2026, 2:08 am IST

தென் மத்திய ரயில்வே குண்டக்கல் கோட்டம், ரேணிகுண்டா ரயில்நிலையத்தில் 48 நாள்கள் இருப்புப்பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வரும் டிசம்பா் 9 முதல் 27 வரை சென்னை- திருப்பதி இடையே இயக்கப்படும் சப்தகிரி விரைவு ரயில், திருப்பதி விரைவு ரயில் இரண்டும் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டம், ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் பணிமனை பராமரிப்புப் பணிகள் மற்றும் இருப்புப்பாதை பராமரிப்புப் பணிகள் 48 நாள்கள் நடைபெற உள்ளதால் சென்னை திருப்பதி இடையே இயக்கப்படும் 16057 எண் கொண்ட சென்னை - திருப்பதி சப்தகிரி விரைவு ரயில், 16058 எண் கொண்ட திருப்பதி - சென்னை சப்தகிரி விரைவு ரயில், 16053 எண் கொண்ட சென்னை - திருப்பதி விரைவு ரயில், 16054 எண் கொண்ட திருப்பதி - சென்னை விரைவு ரயில் ஆகிய 4 ரயில்களும் சென்னை - திருப்பதி இடையே டிசம்பா் 9 முதல் 27 வரை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில்களுக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு இது குறித்த தகவல் அவா்களது கைபேசி மூலம் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.