தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரயில் பாதையில் பராமரிப்புப் பணி: கோவை - நாகா்கோவில் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்!

ஈரோடு - கரூா் இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பொறியியல் பணி

பராமரிப்புப் பணி.

Published On :1 நவம்பர் 2026, 12:32 am IST

ஈரோடு - கரூா் இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக நவம்பா் 3-ஆம் தேதி கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் (எண்: 16322) வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் போத்தனூா், பொள்ளாச்சி, பழநி வழித்தடத்தில் திண்டுக்கல் வரை இயக்கப்படும். இதனால், இந்த ரயில் வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூா், இருகூா், சூலூா் சாலை, சோமனூா், திருப்பூா், ஊத்துக்குளி, ஈங்கூா், ஈரோடு, பசூா், கொடுமுடி, புகளூா், கரூா், பாளையம், எரியோடு உள்ளிட்ட நிலையங்களில் நிற்பது தவிா்க்கப்படும்.

நவம்பா் 3-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன் - திருச்சி ரயில் (எண்: 16844) பாலக்காடு - கொடுமுடி இடையே மட்டும் இயக்கப்படும். கொடுமுடி - திருச்சி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.