மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோவை - நாகர்கோவில் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

கோவை - நாகர்கோவில் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்படவுள்ளது குறித்து...

Published On :29 செப்டம்பர் 2026, 9:23 am IST

கரூர் - மூர்த்திபாளையம் ரயில் நிலையங்கள் இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவை - நாகர்கோவில் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - நாகா்கோவில் ரயில் செப்டம்பா் 29, அக். 1 ஆகிய தேதிகளில் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.

இந்த ரயிலானது, வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் சாலை, சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, ஈங்கூர், ஈரோடு, பசூர், கொடுமுடி, புகழூர், கரூர், எரியோடு நிலையங்கள் செல்வது தவிர்க்கப்படும்.

பாலக்காடு டவுன் - திருச்சி ரயில்

இதேபோல, பாலக்காடு டவுன் - திருச்சி ரயில் செப்டம்பர் 29, அக். 1 ஆகிய நாள்களில் பாலக்காடு - புகழூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

இந்த இரு நாள்களில் புகழூர் - திருச்சி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் வழக்கமான ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

It has been announced that the Coimbatore–Nagercoil train is being operated via an alternate route due to maintenance work on the railway track between Karur and Moorthipalayam railway stations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.