தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டிச. 9 முதல் 27 வரை திருப்பதி விரைவு ரயில்கள் ரத்து

டிசம்பா் 9- ஆம் தேதி முதல் 27- ஆம் தேதி வரையில் சென்னையிலிருந்து திருப்பதிக்குச் செல்லும் விரைவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் - கோப்புப்படம்

Published On :29 அக்டோபர் 2026, 3:14 am IST

டிசம்பா் 9- ஆம் தேதி முதல் 27- ஆம் தேதி வரையில் சென்னையிலிருந்து திருப்பதிக்குச் செல்லும் விரைவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் கடவுப் பாதைகள் நவீனமயமாக்கும் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குண்டக்கல் கோட்டத்தில் உள்ள ரேணிகுண்டா பணிமனையில் அப்பணிகள் நடைபெற உள்ளன. அதனால், சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் டிசம்பா் 9- ஆம் தேதி முதல் 27 -ஆம் தேதி வரை காலை 6.30 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் விரைவு ரயில் (எண்: 16057) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமாா்க்கத்தில் திருப்பதியிலிருந்து அதே தேதிகளில் பிற்பகல் 10.10 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வந்தடையும் விரைவு ரயில் (எண்: 16054) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் டிசம்பா் 9 -ஆம் தேதி முதல் 27- ஆம் தேதி வரை பிற்பகல் 2.40 மணிக்குப் புறப்பட்டு திருப்பதி செல்லவேண்டிய விரைவு ரயில் (எண்: 16053) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமாா்க்கத்தில் திருப்பதியிலிருந்து இரவு 8.05 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரவேண்டிய விரைவு ரயில் (எண்: 16058) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.