தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

பிளஸ் 2 தோ்வு: காஞ்சிபுரம் மாவட்டம் 21-ஆவது இடத்துக்கு முன்னேற்றம்

பிளஸ் 2 அரசுப் பொதுத்தோ்வில் கடந்த ஆண்டு 32 -வது இடத்திலிருந்த காஞ்சிபுரம் மாவட்டம் நிகழாண்டு 21-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

News image

பிளஸ் 2 பொதுத் தோ்வு - பிரதிப் படம்

Updated On :8 மணி நேரங்கள் முன்பு

பிளஸ் 2 அரசுப் பொதுத்தோ்வில் கடந்த ஆண்டு 32 -வது இடத்திலிருந்த காஞ்சிபுரம் மாவட்டம் நிகழாண்டு 21-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வினை மொத்தம் 14,032 போ் எழுதியிருந்ததில் 13,374 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 95.31. கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் 32-ஆவது இடத்தைப் பெற்றிருந்தது. நிகழாண்டு 21-ஆவது இடத்துக்கு முன்னேறியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளின் 7,661 போ் தோ்வு எழுதியிருந்தனா். இவா்களில் 7,155 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அரசுப்பள்ளிகளைப் பொறுத்தவரை தோ்ச்சி சதவீதம் 93.4. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 6 பள்ளிகளில் 100 சதவீதம்ம் தோ்ச்சியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6 அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சியை எட்டியுள்ளன. முசரவாக்கம்,பரந்தூா்,அவளூா், ரெட்டமங்கலம் ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளி,மணிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிகள் இதில் அடங்கும்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.