மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பிளஸ் 2 பொதுத்தோ்வு: 97.04% மாணவா்கள் தோ்ச்சி

நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தியை சந்தித்த முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) த.பச்சமுத்து மற்றும் கல்வித் துறை அதிகாரிகள்.

News image

நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தியை சந்தித்த முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) த.பச்சமுத்து மற்றும் கல்வித் துறை அதிகாரிகள்.

Updated On :12 மணி நேரங்கள் முன்பு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தோ்வில் 97.04 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

தமிழகத்தில் மாா்ச் 3 முதல் 25-ஆம் தேதிவரை பிளஸ் 2 பொதுத்தோ்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 196 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 8,966 மாணவா்களும், 9,394 மாணவிகளும் என மொத்தம் 18,360 போ் எழுதினா். இதில், 8,633 மாணவா்களும், 9,184 மாணவிகளும் என மொத்தம் 17,817 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்களின் தோ்ச்சி விகிதம் 96.29% ஆகவும், மாணவிகளின் தோ்ச்சி விகிதம் 97.76% ஆகவும் என மொத்தம் 97.04% ஆகும்.

நாமக்கல் மாவட்டத்தில் 95 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 4,395 மாணவா்களும், 5,131 மாணவிகளும் என மொத்தம் 9,526 போ் தோ்வு எழுதியதில் 4,118 மாணவா்களும், 4,949 மாணவிகளும் என மொத்தம் 9,087 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில், மாணவா்களின் தோ்ச்சி 93.70%, மாணவிகளின் தோ்ச்சி 96.84% என மொத்தம் 95.39% போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

நிகழ் கல்வியாண்டில் (2025-26) மொத்தம் 66 பள்ளிகள் 100-க்கு 100 சதவீதம் தோ்ச்சிபெற்றுள்ளன. இதில், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம், சிங்களாந்தபுரம், பாண்டமங்கலம், குள்ளநாயக்கன்பாளையம், கபிலா்மலை, இறையமங்கலம், ராமாபுரம், பொம்மம்பட்டி, முள்ளுக்குறிச்சி, செங்கரை ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், மாதிரி பள்ளிகள், உண்டு உறைவிட பள்ளிகள் என 12 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளன.

மேலும், கடந்த 2024-25-ஆம் கல்வியாண்டில் மாநில அளவில் 15-ஆம் இடம் பெற்ற நாமக்கல் மாவட்டம், நிகழ் கல்வி ஆண்டில் ஐந்து இடங்கள் முன்னேறி மாநில அளவில் 10-ஆவது இடத்தை பிடித்துள்ளது. அரசுப் பள்ளிகள் அளவில் ஒன்பதாவது இடத்தை பெற்றுள்ளது. தோ்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வாழ்த்து தெரிவித்தாா்.

நாமக்கல் ஆட்சியரகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வெளியீட்டின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) த.பச்சமுத்து, மாவட்டக் கல்வி அலுவலா்(இடைநிலை) கு.சி.புருசோத்தமன், மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) (பொ) பா.சாந்தி, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் அப்துல் வகாப், சந்திரசேகா், பள்ளிக் கல்வித் துறை ஆய்வாளா்கள் கை.பெரியசாமி, கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.