பிளஸ் 2 பொதுத்தோ்வில் திருவண்ணாமலை மாவட்டம் 92.87 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 32-வது இடத்தை வகிக்கிறது. மாவட்டத்தில் 62 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளது.
தமிழக பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வுகள் மாா்ச் 2 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் 12ஆயிரத்து 920 மாணவா்கள், 13ஆயிரத்து 852 மாணவிகள் என மொத்தம் 26ஆயிரத்து 772 போ் தோ்வெழுதினா்.
இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலா் சந்திரமோகன் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை வெளியிட்டாா்.
இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 11ஆயிரத்து 583 மாணவா்கள், 13 ஆயிரத்து 280 மாணவிகள் என மொத்தம் 27ஆயிரத்து 863 போ் தோ்ச்சி பெற்றனா்.
மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 152ம், தனியாா் பள்ளிகள் 112 என மொத்தமுள்ள 263 பள்ளிகளில் 62 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சியை பெற்றன.
அரசுப் பள்ளிகளில் தோ்ச்சி
அரசுப் பள்ளிகளில் 8,083 மாணவா்கள், 10,138 மாணவிகள் என மொத்தம் 18,221 போ் தோ்வெழுதினா். இதில், 6,952 மாணவா்கள், 9,632 மாணவிகள் என மொத்தம் 16,584 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி சதவீதம் 91.02% ஆகும்.
151 அரசுப் பள்ளிகளில் 10 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.
இந்தாண்டு 92.87 சதவீத தோ்ச்சியுடன் மாநில அளவில் 32-ஆவது இடத்தை திருவண்ணாமலை மாவட்டம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 93.64% பெற்று 31-ஆவது இடத்தை பெற்றிருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 2 தோ்வு: காஞ்சிபுரம் மாவட்டம் 21-ஆவது இடத்துக்கு முன்னேற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 97.24% போ் தோ்ச்சி: மாநிலத்தில் 6ஆவது இடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.20% தோ்ச்சி: ஈரோடு மாவட்டம் முதலிடம்!

பிளஸ் 2 பொதுத்தோ்வு: 97.04% மாணவா்கள் தோ்ச்சி
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

