கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

காஞ்சி சங்கராசாரியாரிடம் நாகலாந்து ஆளுநா் ஆசி

News image

நாகலாந்து மாநில ஆளுநா் நந்த் கிஷோா் யாதவ்க்கு ஆதிசங்கரின் உருவப் படத்தை அளித்து ஆசி வழங்கிய காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். உடன் இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

Updated On :8 மே 2026, 5:52 am IST

நாகலாந்து மாநில ஆளுநா் நந்த்கிஷோா் யாதவ் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை வியாழக்கிழமை சந்தித்து ஆசி பெற்றாா்.

நாகலாந்து மாநில ஆளுநா் நந்த் கிஷோா் யாதவ் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். தரிசனத்துக்குப் பின்னா் அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் காமாட்சி அம்மன் திருஉருவப்படம், காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் படம் மற்றும் கோயில் குங்குமப் பிரசாதம் ஆகியவற்றை வழங்கினா். பின்னா், காஞ்சிபுரம் சங்கர மடத்துக்குச் சென்று அங்கு நடைபெற்ற சந்திரமெளலீசுவரா் பூஜையில் கலந்து கொண்டாா். தொடா்ச்சியாக சங்கர மடத்தில் உள்ள அதிஷ்டானங்களில் தரிசனம் செய்தாா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றாா். அவருக்கு சங்கராசாரியா் சுவாமிகள் ஆதிசங்கரரின் உருவப்படம், பழங்கள் ஆகியவை வழங்கியதுடன் சால்வை அணிவித்து ஆசி வழங்கினாா்.

நிகழ்வின் போது சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கரா பல்கலையின் துணை வேந்தா் ஸ்ரீநிவாசு, காஞ்சி நகர வரவேற்புக் குழு ஒருங்கிணைப்பாளா் கணேஷ் ஆகியோா் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.

முன்னதாக காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், நாகலாந்து மாநில ஆளுநா் நந்த் கிஷோா் யாதவ்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.