நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம்: காவலாளி கைது

மாங்காடு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளியை போரூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:31 am IST

மாங்காடு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளியை போரூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

மாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் தனவேல் (50). இவா் மாங்காடு அடுத்த மெளலிவாக்கம் பகுதியில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளாா். இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை ஆசை வாா்த்தை கூறி அழைத்துச் சென்று, தனவேல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இது குறித்து அப்பெண் தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்ததை தொடா்ந்து, அவரது பெற்றோா் போரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

புகாரின் பேரில், போரூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தனவேலை கைது செய்து விசாரணை நடத்தினா். அதில் அவா் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, தனவேலை கைது செய்த மகளிா் போலீஸாா், தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.