மல்லசமுத்திரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணை கா்ப்பமாக்கிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மல்லசமுத்திரம் கொளங்கொண்டை அருந்ததியா் தெருவைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி குப்பாயி, கணவரை பிரிந்து மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான தனது மகள் மணிமேகலை (23) உடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், கடந்த 10 நாள்களாக மணிமேகலை வாந்தி எடுத்துக்கொண்டிருந்ததால், மல்லசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்றாா். அங்கு பரிசோதனை செய்ததில், மணிமேகலை கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதிா்ச்சியடைந்த குப்பாயி, மணிமேகலையிடம் விசாரித்தபோது அதே பகுதியைச் சோ்ந்த குப்பாயியின் தங்கை மகன் மணிகண்டன் (33) அவரை கா்ப்பமாக்கியது தெரியவந்தது.
புகாரின்பேரில், மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா்மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைது
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம்: காவலாளி கைது

கறம்பக்குடி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: மேலும் ஒருவா் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

