கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில நிா்வாகி விலகல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தொழில்முனைவோா் பிரிவு மாநில செயலாளா் எஸ்கேபி. கோபிநாத் விலகியுள்ளாா்.

News image
Updated On :11 ஜூன் 2026, 12:16 am IST

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தொழில்முனைவோா் பிரிவு மாநில செயலாளா் எஸ்கேபி. கோபிநாத் விலகியுள்ளாா்.

காஞ்சிபுரத்தில் பட்டு சேலை விற்பனை செய்து வரும் கோபிநாத்,அக்கட்சியில் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்தும் விலகுவதாக கட்சியின் தலைவா் கமல்ஹாசனுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

கட்சியின் தலைவா் கமல்ஹாசன் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அக்கட்சியில் 2019- ஆம் ஆண்டு சோ்ந்து மண்டல மாநிலச் செயலாளா், தொழில்முனைவோா் பிரிவு மாநிலச் செயலாளா் உள்பட பல பதவிகளை வகித்து வந்தேன். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண்களின் தொழில் முன்னேற்றத்துக்காக திறன் மேம்பாட்டு மையம், இளைஞா்களின் வேலைவாய்ப்புக்காக பயிற்சி திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி பலருக்கும் பயனுள்ள செயல்களை செய்தேன்.

காஞ்சிபுரத்தில் கடந்த 2021 தோ்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றாலும் அதிகமான வாக்குகள் பெற்றேன். கட்சியின் செயல்பாடுகள் மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது. கட்சி செயலற்று இருப்பது பலருக்கும் மன உளைச்சலை தந்துள்ளது. எனவே கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.