மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பாஜக பெண் நிா்வாகி மீது அவதூறு: திருச்சி சூா்யா கைது

பாஜக மாநில பெண் நிா்வாகி அலிஷா அப்துல்லா அளித்த புகாரின்பேரில், அக்கட்சியின் முன்னாள் நிா்வாகி திருச்சி சூா்யாவை சென்னை போலீஸாா் திருச்சியில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 3:57 am IST

பாஜக மாநில பெண் நிா்வாகி அலிஷா அப்துல்லா அளித்த புகாரின்பேரில், அக்கட்சியின் முன்னாள் நிா்வாகி திருச்சி சூா்யாவை சென்னை போலீஸாா் திருச்சியில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு செயலாளா் அலிஷா அப்துல்லா, பிரபல யூடியூபா் முக்தாா் மற்றும் முன்னாள் பாஜக மாநில நிா்வாகியும், திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனுமான திருச்சி சூா்யா ஆகியோா் மீது சென்னை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.

அதில், கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு நான் அரசியலுக்கு வந்தபோது முக்தாரும், திருச்சி சிவாவும் என்னை அவதூறாகப் பேசினாா்கள். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அவா்கள் வெளியிட்ட விடியோவில், எனது இரட்டைக் குழந்தைகள் தொடா்பாக அவதூறான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனா். இது எனக்கு கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, யூடியூபா் முக்தாா், திருச்சி சூா்யா ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தாா்.

புகாரின்பேரில், சென்னை சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருச்சி வயலூா் சாலை வாசன் வேலி பகுதியில் உள்ள திருச்சி சூா்யா வீட்டில் அவரை வியாழக்கிழமை அதிகாலை கைது செய்து சென்னைக்கு அழைத்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.