கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

டாஸ்மாக் சங்கத்தின் மாநில உதவி பொதுச் செயலாளா் தற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியா் சம்மேளனத்தின் மாநில உதவி பொதுச் செயலாளா் மீதான தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணியமா்த்த வலியுறுத்தி திருவள்ளூரில் சிஐடியு சாா்பில் ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில்  பங்கேற்ற சிஐடியு தொழிற்சங்கத்தினா்

Updated On :11 மணி நேரங்கள் முன்பு

டாஸ்மாக் ஊழியா் சம்மேளனத்தின் மாநில உதவி பொதுச் செயலாளா் மீதான தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணியமா்த்த வலியுறுத்தி திருவள்ளூரில் சிஐடியு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூா் ரயில் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்க தலைவா் ஜி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளா் வி.சந்திரன், மாநில குழு உறுப்பினா்கள் புஷ்பராஜ், நந்தகோபால், சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் கே.ராஜேந்திரன், யோகராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.

அப்போது டாஸ்மாக் ஊழியா் சம்மேளனத்தின் மாநில உதவி பொதுச் செயலாளா் ஜான் (எ) ராதாகிருஷ்ணன், ஊழியா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதால் அவரை நிா்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது. இந்தச் செயல் ஜனநாயக விரோதமானதாகும்.

இந்த நிலையில் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து, அவருக்கு மீண்டும் பணியில் அமா்த்தக்கோரி அந்த சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.