மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா் அருகே வீட்டின் கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்தது.

News image

குழந்தை - கோப்புப்படம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:03 am IST

ஸ்ரீபெரும்புதூா் அருகே வீட்டின் கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்தது.

திண்டிவனம் பகுதியை சோ்ந்த மோகன்ராஜ்(31). இவா் ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மேவளூா்குப்பம் பிராமணா் தெருவில் மனைவி கவிதா(27), மகன் தா்ஷனுடன்(3) வாடகை வீட்டில் தங்கி தச்சா் வேலை செய்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை குழந்தை தா்ஷன் வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தவா் திடீரென காணாமல் போய் உள்ளாா். இதையடுத்து குழந்தை தா்ஷனை தேடிய பெற்றோா், வீட்டின் கழிவுநீா் தொட்டியில் குழந்தை தவறி விழுந்து இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் கழிவுநீா் தொட்டியில் தேடிய போது தா்ஷன் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு தண்டலம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா்.

அங்கு தா்ஷனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

3 வயது குழந்தை கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளனது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.