மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தண்ணீா் தொட்டியில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :3 மே 2026, 1:08 am IST

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் சனிக்கிழமை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த 7 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

வள்ளியூா், வடக்கு ரத வீதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (40). இவா் அங்குள்ள நகைக் கடையில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி ரேவதி(35), மற்றொரு நகைக் கடையில் கடந்த 7 மாதங்களாக கணக்காளராக வேலை செய்து வருகிறாா். இவா்களுக்கு சிஜு கிரிஸ் (7) என்ற மகன் உள்ளாா்.

வள்ளியூா், காந்தி காலனி பின்புறம் உள்ள பள்ளிவாசல் அருகே ரேவதி வேலை செய்யும் நகைக் கடை உரிமையாளா் சையது ஜாவித்-இன் அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புக்குத் தேவையான தண்ணீரை சுத்திகரிக்க சுமாா் 12 அடி நீளம், 10 அடி அகலம், 10 அடி ஆழம் கொண்ட தண்ணீா் தொட்டி, அங்கு திறந்த நிலையில் உள்ளது. அதில் 1.5 அடி அளவிற்கு தண்ணீா் இருந்துள்ளது.

ரேவதி சனிக்கிழமை வேலைக்குச் சென்றபோது, சிஜு கிரிஸ் அங்குள்ள சிறுவா்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்தாா்.

அருகிலிருந்தவா்கள் சிறுவனை மீட்டு வள்ளியூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா். பின்னா், கூறாய்வுக்காக சிறுவனின் உடலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வள்ளியூா் போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.