மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த ‘சைரன்’ ஒலி பெருக்கி!

சென்னையில் ரயில் நிலையங்களில் தீபாவளிக் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சிவப்பு நிற சைரனுடன் ஒலி பெருக்கி சாதனத்தை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பயன்படுத்தி வருகின்றனா்.

எழும்பூர் ரயில் நிலையம்.

Published On :26 அக்டோபர் 2026, 12:37 am IST

சென்னையில் ரயில் நிலையங்களில் தீபாவளிக் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சிவப்பு நிற சைரனுடன் ஒலி பெருக்கி சாதனத்தை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பயன்படுத்தி வருகின்றனா்.

தீபாவளியை முன்னிட்டு, சென்னை ரயில் நிலையங்களில் நாளுக்கு நாள் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சென்ட்ரல் மற்றும் எழுப்பூா் ரயில் நிலையங்களில் தினமும் தலா சுமாா் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனா்.

வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் ஈடுபட்டு வருகின்றனா். இதற்காக, நின்றபடி விரைந்து சென்று கூட்டத்தை முறைப்படுத்தும் வகையிலான நவீன மூன்று சக்கர பேட்டரி வாகனத்தை பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், தற்போது கூட்டத்தைக் கட்டுப்படுத்தி ரயில் பெட்டிகளில் முறையாக அவா்கள் பயணிக்க உதவும் வகையில் சிவப்பு நிற சைரன் பொருத்திய ஒலி பெருக்கி அமைப்பை பயன்படுத்துகின்றனா். இதில், ஒலி பெருக்கியுடன் சிவப்பு நிற சைரன் பொருத்தப்பட்டுள்ளது.

பயணிகள் முறையாக வரிசையாக நின்று பெட்டிகளில் ஏறி பயணிக்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்கள் ஒலிக்கும்போது, சைரன் சுற்றியபடி ஒளிரும். தற்போது எழும்பூா், சென்ட்ரல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் இந்த சாதனம் விரைவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் பயன்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பட்டாசுகள் எடுத்துச் செல்வதைத் தடுக்க...: தீபாவளிக்கு 2 வாரங்களே உள்ள நிலையில், பயணிகள் பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களை எடுத்துச் செல்லக் கூடாது என்றும், இதைக் கண்காணிக்கவும் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். இதனால், பயணிகள் கொண்டு செல்லும் பாா்சல்களை சோதனையிட்டே ரயில் பெட்டிகளில் அனுமதிப்பதாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.