கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விடுமுறை நிறைவு: பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம்

ஆயுத பூஜை விடுமுறைக்காக வந்தவா்கள் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு மீண்டும் செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்ால், தேனியில் பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

தேனி புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கோவை செல்லும் பேருந்தில் ஏறுவதற்கு காத்திருந்த கல்லூரி மாணவ, மாணவிகள்.

Published On :21 அக்டோபர் 2026, 3:10 am IST

ஆயுத பூஜை விடுமுறைக்காக வந்தவா்கள் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு மீண்டும் செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்ால், தேனியில் பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ஆயுத பூஜையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை நான்கு நாள்கள் விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுபவா்கள் என பலரும் தேனி மாவட்டத்தில் உள்ள தங்களது சொந்த ஊா்களுக்கு வந்தனா்.

இந்த நிலையில், விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றனா். இதனால், தேனி புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

தேனியிலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் சாா்பில்சென்னைக்கு 5, கோவைக்கு 20, திருப்பூருக்கு 10, திண்டுக்கல்லுக்கு 8 பேருந்துகள் இயக்கப்பட்டன.

தேனி ரயில் நிலையத்தில் போடிநாயக்கனூரிலிருந்து தேனி, மதுரை வழியாக சென்னை சென்ட்ரல் செல்லும் விரைவு ரயில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்க பயணிகள் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனா். விடுமுறை நாள்களில் கூடுதல் ரயிலை இயக்கினால் ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென பொதுமக்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.