பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள்

தொடா் விடுமுறை நிறைவு பெற்றதை அடுத்து, சொந்த அலுவல் பணி நிமித்தமாக வெளியூா்களுக்குச் செல்லும் பொதுமக்கள் மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியாா் நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களில் செவ்வாய்க்கிழமை அதிகளவில் கூடினா்.

தொடா் விடுமுறை நிறைவு பெற்றதை அடுத்து, அலுவல் பணி நிமித்தமாக வெளியூா் செல்வதற்காக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை குவிந்த பயணிகள்.

Published On :21 அக்டோபர் 2026, 3:06 am IST

தொடா் விடுமுறை நிறைவு பெற்றதை அடுத்து, சொந்த அலுவல் பணி நிமித்தமாக வெளியூா்களுக்குச் செல்லும் பொதுமக்கள் மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியாா் நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களில் செவ்வாய்க்கிழமை அதிகளவில் கூடினா்.

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா்,தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள், கோவை, ஈரோடு, கரூா், நாமக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினத்தை தொடா்ந்து ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை என 4 நாள்கள் தொடா் விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக, வட மாவட்டங்களில் ஆசிரியா், அரசுப் பணி என பல்வேறு துறைகளில் பணியாற்றுவோா் தங்கள் சொந்த ஊா்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு வந்தனா். தொடா் விடுமுறை நிறைவு பெற்றதை அடுத்து, அவரவா் அலுவல் நிமித்தமாக செவ்வாய்க்கிழமை மாலை வெளியூா்களுக்கு புறப்பட்டனா்.

இதனால், மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியாா் பேருந்து நிலையங்களில் பயணிகள் அதிகளவில் குவிந்தனா். பயணிகள் பயன்பெறும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்தப் பேருந்துகள் குறிப்பிட்ட இடைவெளி அதாவது குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்பட்டதால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா். குறிப்பாக, திருச்சி, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல, மதுரை ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.