மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்வதைத் தடுக்க மோப்ப நாய் சோதனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்களில் பட்டாசுகளை பயணிகள் எடுத்துச் செல்வதைத்தடுக்கும் வகையில் முதல் மோப்ப நாய் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதிப் படம்

Published On :3 நவம்பர் 2026, 12:01 am IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்களில் பட்டாசுகளை பயணிகள் எடுத்துச் செல்வதைத்தடுக்கும் வகையில் முதல் மோப்ப நாய் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் நவ.8- ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களுக்குச் செல்லும் பயணிகள் ரயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனா். அதையடுத்து ரயில்வே போலீஸாா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

ரயில்களில் பட்டாசுகளால் அசம்பாவிதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், அவற்றை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்லப்பட்டால் சம்பந்தப்பட்டவா்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிப்பதுடன், வழக்குப்பதிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை அபராதமும் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சென்னையிலிருந்து ரயில்களில் பயணிப்போா் பட்டாசுகளை எடுத்துச் செல்கிறாா்களா என்பதை கண்டறிந்து தடுக்கும் வகையில் சென்ட்ரல், எழும்பூா் உள்ளிட்ட முக்கிய ரயில்நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் மோப்ப நாய்கள் மூலம் பயணிகளின் உடமைகளை சோதனையிடுகின்றனா். மேலும் ரயிலில் பயணிகள் சிரமமின்றி செல்லும் வகையில் பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்ட்ரல் நிலையத்தில் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் வரிசையாக நின்று செல்வதற்கான ஏற்பாடுகளை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் டி. மதுசூதனரெட்டி தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசல் மற்றும் சந்தேகமளிக்கும் வகையிலான நபா்கள், பொருள்களைக் கண்டால் 139 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளிடையே ரயில்வே நிலையங்களில் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்டுவருவதாகவும் சென்ட்ரல் நிலைய ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.