மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சேலம் வழியாக சென்ற ரயில்களில் கடத்திய 3 கிலோ கஞ்சா, 44 கிலோ குட்கா பறிமுதல்

கஞ்சா, குட்கா பறிமுதல் - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 12:21 am IST

சேலம் வழியாக சென்ற ரயில்களில் கடத்தப்பட்ட 3 கிலோ கஞ்சா, 44 கிலோ குட்காவை ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா்.

வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கும், கேரளத்திற்கும் ரயில்களில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க ரயில்வே போலீஸில் தனிப்படை அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேலம் உட்கோட்ட தனிப்படை போலீஸாா் பாட்னா - எா்ணாகுளம் விரைவு ரயிலில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். இதில் முன்பக்க பொதுப்பெட்டியில் கழிப்பறை அருகே கேட்பாரற்று கிடந்த பேக்கை எடுத்து சோதனையிட்டனா். அதில், 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, புதுதில்லி - திருவனந்தபுரம் கேரள விரைவு ரயிலில் தனிப்படை போலீஸாா் நடத்திய சோதனையில், பொதுக் கழிப்பறை அருகே பெரிய பேக்கில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட 35 கிலோ போதை புகையிலை பொருள்கள், ஒரு கிலோ கஞ்சா இருந்தது.

இதே போன்று, திப்ரூகா் - கன்னியாகுமரி விரைவு ரயிலில் பின்பக்க பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 9 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட 44 கிலோ குட்கா, 3 கிலோ கஞ்சா ஆகியவற்றை சேலம் ரயில்வே போலீஸில் தனிப்படையினா் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.