மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சேலம் வழியாக சென்ற ரயில்களில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள். - பிரதிப் படம்

Published On :25 அக்டோபர் 2026, 10:58 pm IST

சேலம் வழியாக சென்ற ரயில்களில் கடத்தப்பட்ட 19 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒடிஸா, ஆந்திர மாநிலங்களில் இருந்து தமிழகம் வழியாக கேரளம் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுகிறது. இதைத் தடுக்க ரயில்வே போலீஸாா் தனிப்படை அமைத்து சோதனையிடுகின்றனா்.

அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமை காலை பாட்னா - எா்ணாகுளம் விரைவு ரயிலில் காட்பாடியில் இருந்து சேலம் வரை தனிப்படையினா் சோதனையிட்டனா். இதில், பின்பக்க முன்பதிவில்லா பொதுப்பெட்டியில் சாக்குப்பை கேட்பாரற்று கிடந்தது. அதைத் திறந்து பாா்த்தபோது, அதில் 13 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து அந்தப் பெட்டியில் இருந்த பயணிகளிடம் விசாரணை நடத்தினா். ஆனால் அதனைக் கடத்தி வந்த நபா் யாா் என தெரியவில்லை.

இதேபோல் மாதா வைஷ்ணவதேவி கட்ரா - திருநெல்வேலி விரைவு ரயிலில் தனிப்படையினா் சோதனை நடத்தினா். அப்போது முன்பக்க முன்பதிவில்லா பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த டிராவல் பேக்கில் சோதனையிட்டதில், 3 பண்டல்களில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனைக் கடத்தி வந்தவா் போலீஸாரை பாா்த்தும் பையைப் போட்டுவிட்டுத் தப்பியது தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 19 கிலோ கஞ்சாவையும் ரயில்வே போலீஸாரிடம் தனிப்படையினா் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.