பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிவப்பு வேண்டாம், நீலம்தான் வேண்டும்! கோவையில் விசித்திர பைக் திருடன்!!

சிவப்பு வேண்டாம், நீலம்தான் வேண்டும் என்று கோவையில் விசித்திர பைக் திருடன் பற்றிய சம்பவம்...

திருடப்பட்ட பைக்குகள்

திருடப்பட்ட பைக்குகள்

Published On :3 நவம்பர் 2026, 2:05 pm IST

கோவை மாவட்டத்தில், நடந்த பைக் திருட்டுச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு, சிசிடிவி காட்சியில் தெரிய வந்த தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காரணம், சிப்பு நிற பைக் பிடிக்கவில்லை, நீல நிற பைக்தான் வேண்டும் என்று சொகுசு பைக்கைத் திருடிய திருடன், சிவப்பு ஆர்15 பைக்கை வைத்துவிட்டு, நீல நிற பைக்கை மாற்றி தூக்கிச் சென்ற நபர் பற்றிய செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பீளமேடு காவல் நிலையத்தில் 2 புகார்கள் குவிந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கோவையில் விலை உயர்ந்த R15 ரக சொகுசு பைக்கை திருடிய மர்ம நபர், அதன் சிவப்பு நிறம் பிடிக்கவில்லை என்பதற்காக மற்றொரு பகுதியில் அந்த பைக்கை நிறுத்தி விட்டு, தனக்கு பிடித்த நீல நிற பைக்கை திருடிச் சென்ற விசித்திர சம்பவம் அப்பகுதியினருக்கு நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, பீளமேடு டைடல் பார்க் அருகேயுள்ள தண்ணீர் பந்தல் சாலையில், கடந்த 1-ஆம் தேதி அதிகாலை சுமார் 3:15 மணி அளவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சிகப்பு நிற 'யமஹா R15' (Yamaha R15) ரக விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவன் திருடிச் சென்று உள்ளார்.

சிவப்பு நிற பைக்கை திருடிக்கொண்டு அதிவேகமாகச் சென்ற அந்த திருடன், அதிகாலை 3:30 மணி அளவில் அவிநாசி சாலையில் உள்ள கோல்டு வின்ஸ் பகுதிக்கு வந்து உள்ளான். அங்கு வந்தவனுக்கு தான் ஓட்டி வந்த சிவப்பு நிற பைக் பிடிக்கவில்லை போலும்!

​உடனடியாக அந்த சிவப்பு நிற பைக்கை அங்கேயே நிறுத்தி விட்டு, அங்கே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த மற்றொரு நீல நிற (Blue Color) R15 பைக்கை நோட்டமிட்டு, அதை நைஸாகத் திருடிக் கொண்டு பறந்து விட்டான்.

காலையில் எழுந்து பார்த்த நீல நிற பைக்கின் உரிமையாளர், தனது பைக் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆனால், விசித்திரமாகத் தனது வீட்டின் வாசலில் வேறொருவரின் சிகப்பு நிற R15 பைக் நின்று கொண்டு இருப்பதைப் பார்த்து குழப்பம் அடைந்தார்.

​இதனிடையே, பைக் காணாமல் போனது குறித்து தண்ணீர் பந்தல் பகுதி மற்றும் கோல்டு வின்ஸ் பகுதியைச் சேர்ந்த இரு வேறு உரிமையாளர்களும் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஒரே காவல் எல்லைக்குள் அடுத்தடுத்து நடந்த இந்த விசித்திர பைக் திருட்டு சம்பவங்கள் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

​சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், சொகுசு பைக்குகளை மட்டுமே குறிவைத்து, அதுவும் பிடித்த நிறத்திற்காக பைக்கை மாற்றித் திருடிச் சென்ற அந்த 'கலர்புல்' திருடனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.