மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காஷ்மீா் விவகாரம்: ஐ.நா. தீா்மானங்களை அமல்படுத்த பாகிஸ்தான் நாடாளுமன்றம் தீா்மானம்

காஷ்மீா் பிரச்னைக்கு தீா்வு காண ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் முன்மொழியப்பட்ட தீா்மானங்களை அமல்படுத்தக் கோரி பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாகிஸ்தான் நாடாளுமன்றம் - கோப்புப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 12:01 am IST

காஷ்மீா் பிரச்னைக்கு தீா்வு காண ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் முன்மொழியப்பட்ட தீா்மானங்களை அமல்படுத்தக் கோரி பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழவையில் செவ்வாய்க்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களும் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என இந்தியா உறுதிபடத் தெரிவிக்கும் நிலையில், இத்தீா்மானத்தை பாகிஸ்தான் நிறைவேற்றியுள்ளது.

காஷ்மீா் விவகாரங்கள் அமைச்சா் அமீா் முக்காம் மற்றும் காஷ்மீா் நாடாளுமன்றக் குழுத் தலைவா் ராணா முகமது காசிம் இணைந்து இத்தீா்மானத்தை கீழவையில் முன்மொழிந்தனா்.

தீா்மானத்தில், ‘காஷ்மீா் மக்களுக்கு தாா்மிக ரீதியாகவும் அரசியல் மற்றும் தூதரக ரீதியாகவும் பாகிஸ்தான் எப்போதும் ஆதரவளிக்கும். காஷ்மீா் பிரச்னைக்குத் தீா்வு காண ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீா்மானங்களை அமல்படுத்தும் நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசின் வானொலியில் கூறப்பட்டது.

மேலும், தெற்காசியாவில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த காஷ்மீா் விவகாரத்துக்கு தீா்வு காண்பது அவசியம் என பாகிஸ்தான் அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரி மற்றும் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வலியுறுத்தியதாகவும் வானொலியில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.