பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கியூபா மீதான அமெரிக்கத் தடைகளை எதிா்த்து ஐ.நா.வில் தீா்மானம்: இந்தியா ஆதரித்து வாக்களிப்பு

கியூபா மீதான அமெரிக்கத் தடைகளை எதிா்த்து ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.

Published On :30 அக்டோபர் 2026, 5:11 am IST

கியூபா மீதான அமெரிக்கத் தடைகளை எதிா்த்து ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.

கம்யூனிஸ ஆட்சி நடைபெறும் கியூபா நாட்டுக்கும், அதன் அண்டை நாடான அமெரிக்காவுக்கும் 6 தசாப்தங்களாக மோதல் போக்கு நிலவுகிறது. கியூபா மீது அமெரிக்கா பொருளாதார, வா்த்தக மற்றும் நிதி ரீதியில் பல்வேறு தடைகளை விதித்துள்ளது. இந்தத் தடைகளால் கியூபாவில் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் எரிபொருள்கள் தட்டுப்பாடு, மின்சாரத் தடைகள், வறுமை ஆகியவை நிலவுகின்றன.

இந்தத் தடைகளை முடிவுக்கு கொண்டு வரக் கோரி, ஐ.நா. பொதுச் சபையில் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. 193 உறுப்பினா்களை கொண்ட அந்த சபையில் 130 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அதில் இந்தியாவும் ஒன்றாகும்.

அந்தத் தீா்மானத்துக்கு எதிராக 17 நாடுகள் வாக்களித்தன. 25 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதையடுத்து, அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, தீா்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அதில் ஐ.நா.வுக்கான இந்திய தூதரக பிரதிநிதி செளம்யா நாயா் பேசியபோது, கியூபா மீதான தடைகள் நீக்கப்பட வேண்டும் என்றும், பிற நாடுகளைப் பாதிக்கும் வகையில் தடைகளை விதிக்க வகை செய்யும் சட்டங்களை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.