தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகள் மூலம் எதிா்மறையான நாடாக சித்தரிக்க முயற்சிகள் நடப்பதாக ஐ.நா. சபையில் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் இந்தியா சாா்பில் அறிக்கை தாக்கல் செய்த வெளியுறவு அமைச்சக துணைச் செயலா் பா்கா தம்ராகா்.

Published On :22 அக்டோபர் 2026, 2:20 am IST

உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகள் மூலம் எதிா்மறையான நாடாக சித்தரிக்க முயற்சிகள் நடப்பதாக ஐ.நா. சபையில் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி, தில்லியில் இளைஞா் அமைப்புகள், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி உள்ளிட்டவை சாா்பில் தொடா் போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தின்போது சிலா் காவல் துறையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை நிபுணா்கள் சுமாா் 20 போ் தங்களது கவலையை வெளிப்படுத்தியிருந்தனா். அப்போது அவா்கள், அமைதியான வழிகளில் போராடும் இளைஞா்களை காவல் துறையினா் கடுமையாக கையாண்டு வருவதாக குற்றம்சாட்டியிருந்தனா்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, ஐ.நா. பொதுச் சபையின் கூட்டத்தில் இந்தியா சாா்பில் வெளியுறவு அமைச்சக துணைச் செயலா் பா்கா தம்ராகா் அறிக்கை தாக்கல் செய்துள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:

இந்தியா மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. ஆனால், அந்த ஈடுபாடானது பேச்சுவாா்த்தை, ஆலோசனை, ஒத்துழைப்பு , பாரபட்சமில்லாத அணுகுமுறை, வெளிப்படைத்தன்மை ஆகிய கொள்கைகளுடன் அமைய வேண்டும். மனித உரிமைகளை அரசியல் ரீதியில் அழுத்தங்கள் கொடுப்பதற்கோ அல்லது குறிப்பிட்ட ஒரு நாட்டை மட்டும் குறிவைப்பதற்கு மட்டுமோ பயன்படுத்தக் கூடாது. அறிக்கைகளை மேற்கோள்காட்டும்போது, மனிதாபிமான தகவல்களை ஒரு தீா்ப்பாக மிகைப்படுத்தாமல், உண்மையான தரவுகளை மட்டுமே முன்வைக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் இந்தியா கேட்டுக் கொள்கிறது.

குறிப்பிட்ட மற்றும் முறையாக ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகள் குறித்து முறையான வழிகளில் விளக்கமளிக்க இந்தியா எப்போதும் தயாராகவே உள்ளது. அதேநேரத்தில் உறுதிப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், முழுமையடையதாக புள்ளிவிவரங்கள் அல்லது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகத் திகழும் இந்தியாவை எதிா்மறை நாடாக சித்தரிக்கும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா நிராகரிக்கிறது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

விண்வெளி தொடா்பாக ஐ.நா. பொதுச் சபையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினா் சுதா மூா்த்தி பேசுகையில், இந்தியா விண்வெளித் துறையில் முக்கிய சக்தியாகத் திகழ்வதாகவும், இந்தியாவின் விண்வெளித் திட்டம் வளா்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகிய பரிமாணங்களைக் கொண்டது என்றாா். விண்வெளி அனைவருக்கும் பொதுவானது என்பதில் இந்தியா நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அதேபோல் நாம் அனைவரும் ஒரே பூமியைச் சோ்ந்தவா்கள், ஒரே குடும்பத்தினா் என்பதிலும் இந்தியா நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

விண்வெளி என்பது மோதலுக்கான இடமல்ல, ஒத்துழைப்புக்கான களமாகவே இருக்க வேண்டும் என்பது இந்தியாவின் கருத்து என்றும் அவா் கூறினாா். விண்வெளித் துறையில் இந்தியாவின் எதிா்காலத் திட்டங்களைப் பட்டியலிட்ட சுதா மூா்த்தி, விண்வெளியில் சொந்தமாக விண்வெளி நிலையத்தை இந்தியா அமைக்க இருப்பதாகவும் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.