தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதிய போர்? ஈரானுக்குப் பிறகு கியூபாவை நாங்கள்..! - டிரம்ப் சூசகம்!

கியூபா மீதான அமெரிக்காவின் அழுத்தம் அதிகரிக்கக் கூடும் என அதிபர் டிரம்ப் பேச்சு...

Trump hints at Cuba move

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ஏபி

Published On :24 அக்டோபர் 2026, 9:41 am IST

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு கியூபா மீதான அழுத்தங்கள் அதிகரிக்கக் கூடும் என்பதைக் குறிப்பிடும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.

ஃபுளோரிடா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (அக். 23) நடைபெற்ற குடியரசுக் கட்சியின் பிரசாரத்தில் அதிபர் டிரம்ப் கலந்துகொண்டார். அப்போது, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகு கியூபா மீது அமெரிக்க கடற்படை மூலம் அழுத்தம் கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி, தனது ஆதரவாளர்களுடன் அவர் பேசுகையில்,

“எனக்குக் கொஞ்சம் இடைவேளைக் கொடுங்கள். ஈரானில் இருந்து திரும்பும் வழியில் கியூபாவை நாங்கள் பார்த்துக்கொள்வோம்.

அந்த அழகான கப்பல்கள் (அமெரிக்க கடற்படை) கியூபாவைக் கடந்து செல்லும். அவற்றில் ஒன்றை நாம் அவர்கள் கடற்கரை அருகில் நிறுத்துவோம். அவர்கள் தங்களின் கைகளை உயர்த்துவார்கள், அதன் பிறகு ஒப்பந்தத்தை முடித்துவைக்க நாம் மார்கோ ரூபியோவை (அமெரிக்க வெளியுறவு அமைச்சர்) அந்நாட்டுக்கு அனுப்புவோம்” எனக் கூறியுள்ளார்.

இருப்பினும், கியூபா மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா? அல்லது அந்நாட்டு அரசு உடன் உறவுகள் மேம்படுத்தப்படுமா? என்பது குறித்து அதிபர் டிரம்ப் எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை.

ஏற்கெனவே, கம்யூனிஸ்ட் நாடான கியூபாவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுத்து வருகின்றது. கடந்த திங்களன்று (அக். 19) முன்னாள் கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுக்கு எதிராக ஃபுளோரிடா மாகாண அரசு பிடியாணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

US President Donald Trump has indicated that pressure on Cuba may increase after military action against Iran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.