மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிரான்ஸ் விரைவில் முஸ்லிம் நகரமாக மாறும்: டிரம்ப்

பிரான்ஸ் நாட்டில் குடியேறுபவர்கள் அதிகரித்ததாலேயே வன்முறை வெடித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது குறித்து...

US President Trump | President Macron

அமெரிக்க அதிபர் டிரம்ப் | பிரான்ஸ் அதிபர் மேக்ரான் - கோப்புப் படம்

Published On :20 அக்டோபர் 2026, 4:47 am IST

பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரம் மிக விரைவில் முஸ்லிம் நகரமாக மாறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது தொடர்பாக இளம் தலைமுறையினர் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது விலைவாசி உயர்வு, பணவீக்கம், அந்நாட்டு அரசின் சிக்கன கொள்கைகளுக்கு எதிராக மக்களும் தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசுக்கு எதிராக சுமார் 5.5 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு அரசு கூறும்நிலையில், 8 லட்சத்துக்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தொழிற்சங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், பிரான்ஸ் வன்முறை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது, பிரான்ஸில் குடியேறியவர்களே அந்நாட்டைக் கைப்பற்றிவிட்டனர். அந்நாட்டின் எல்லைகளை அரசு விரைவாக மூட வேண்டும்.

உலகில் உள்ள அனைவரையும் உங்கள் நாட்டுக்குள் நீங்கள் அனுமதிக்கிறீர்கள். பாரீஸ், ஒரு முஸ்லிம் நகரமாக மிக விரைவில் மாறப் போகிறது.

பிரான்ஸில் மிகப் பெரிய தவறைச் செய்வதாகவும், உலகில் உள்ள அனைவரும் உள்ளே வருவதற்கு அவர்கள் அனுமதிப்பதாகவும் நீண்ட காலத்துக்கு முன்பே மேக்ரானிடம் நான் கூறினேன். அவர்கள் நாட்டின் எல்லைகளை மூட விடுமாறும் நான் கூறினேன்.

நாங்கள் எங்கள் (அமெரிக்கா) எல்லைகளை மூடிவிட்டோம். ஆனால், அவர் (பிரான்ஸ்) மூடவில்லை. ஐரோப்பாவின் எல்லைகள் மூடாவிட்டால் அழிந்துவிடும். ஒரு காலத்தில் சிறந்த நாடாக இருந்த நாடு, தற்போது சிதைந்து விட்டது. காலம் கடப்பதற்குள், பிரான்ஸ் மீண்டும் கட்டுப்பாட்டைப் பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

Summary

Paris is going to be a Muslim city very soon, says US President Donald Trump

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.