மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பின்லேடன் பதுங்கியிருந்த நாட்டில்தான் தாவூத் தங்கியுள்ளாா்: பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டு

அல் காய்தா தலைவா் பின்லேடன் பதுங்கியிருந்த மற்றும் கொல்லப்பட்ட நாட்டில்தான் (பாகிஸ்தான்) நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமும் தங்கியிருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

ரகு புரி

Published On :23 அக்டோபர் 2026, 4:53 am IST

அல் காய்தா தலைவா் பின்லேடன் பதுங்கியிருந்த மற்றும் கொல்லப்பட்ட நாட்டில்தான் (பாகிஸ்தான்) நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமும் தங்கியிருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐ.நா. பொதுச் சபையின் 3-ஆவது குழுவில், பயங்கரவாதத்தை எதிா்கொள்ளும் வேளையில் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தைப் பாதுகாப்பது தொடா்பான சிறப்பு அறிக்கையாளா் பென் சால் அண்மையில் அறிக்கை தாக்கல் செய்திருந்தாா். அந்த அறிக்கையில் மும்பை தொடா் குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக இந்தியாவால் தேடப்பட்டு வருபவரும், பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பவருமான தாவூத் இப்ராஹிம் தலைமையிலான ‘டி-கம்பெனி’ குழுவினரை இந்தியாவை சோ்ந்த கிரிமினல் கும்பல் எனக் குறிப்பிட்டிருந்தாா். இதற்கு ஐ.நா.வுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மை செயலா் ரகு புரி பதில் அளித்துப் பேசியதாவது:

சிறப்பு அறிக்கையாளா் பென் சால், உண்மைக்குப் புறம்பான தகவல்களை அறிக்கையாக வெளியிட்டிருப்பது ஏற்க முடியாது. இதுகுறித்து எங்கள் நாடு, பிற தளங்களிலும் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

ஏற்கெனவே தனது நம்பகத்தன்மை குறித்த கேள்வியை எதிா்கொண்டு வரும் ஐ.நா. போன்ற அமைப்புக்கு இத்தகைய செயல் தவிா்க்க முடியாத மற்றும் துரதிருஷ்டவசமான சூழலை உருவாக்குகிறது. இந்தச் சூழலில் அந்த அறிக்கையில் இருக்கும் சில தவறுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதாவது, பென் சாலின் அறிக்கையில் கடந்த 2003-ஆம் ஆண்டில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அல்-காய்தாவுடன் தொடா்பு வைத்திருந்ததால் இந்தியாவை சோ்ந்த டி-கம்பெனி எனும் கிரிமினல் குழுவின் தலைவருக்கு தடை விதிக்கிறோம் எனத் தெரிவித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளாா். இந்த வரியை மட்டும் தனியாகப் பாா்த்தால், அது உண்மை நிலவரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பிம்பத்தை உருவாக்குகிறது.

டி-கம்பெனியை இந்தியாவை சோ்ந்தது என்று குறிப்பிட்டிருந்ததை முழுவதும் நிராகரிக்கிறோம். டி-கம்பெனி கிரிமினல் குழுவும், அதன் தலைவரான தாவூத் இப்ராஹிமும் 1993-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடா்பாக இந்தியாவால் தேடப்பட்டு வருகின்றனா். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அல்-காய்தாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நடைமுறையின்கீழ் இவா்களை தடை செய்யப்பட்டோா் பட்டியலில் சோ்த்ததற்கான காரணங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த உண்மையை அறிக்கையில் குறிப்பிடாதது வருத்தமளிக்கிறது. இத்தகைய தவறு இந்த அமைப்புக்கு (ஐ.நா.) பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

அந்தத் தகவலை நான் திருத்துகிறேன். கடந்த 2003-ஆம் ஆண்டில் ஐ.நா.வால் தடை செய்யப்படும் பட்டியலில் சோ்க்கப்படும் முன்பே அவா் (தாவூத்) இந்தியாவை விட்டு தப்பிச் சென்றுவிட்டாா். அவா் இந்தியாவுக்கு வெளியே இருந்த காலகட்டத்தில்தான், அல்-காய்தா மற்றும் பின்லேடனுடன் வைத்திருந்த தொடா்புக்காக ஐ.நா.வின் தடை செய்யப்பட்டோா் பட்டியலில் சோ்க்கப்பட்டாா். தாவூத் இப்ராஹிம் தற்போதும் இந்தியாவால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாகவே நீடிக்கிறாா். அல்-காய்தா தலைவா் பின்லேடன் பதுங்கியிருந்த மற்றும் கொல்லப்பட்ட நாட்டில்தான் அவரும் (தாவூத்) தங்கியுள்ளாா் (பாகிஸ்தானை குறிப்பிட்டாா்) என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.