மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜோா்டான் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் கைது

ஜோா்டான் நாட்டில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி...

Jordanian security forces arrest 3 men for deadly attack on church

ஜோா்டான் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு - ஏபி

Published On :26 அக்டோபர் 2026, 11:32 am IST

ஜோா்டான் நாட்டில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மூன்று பேரை ஜோர்டான் பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் மூவரும் காயமடைந்துள்ளதாகவும் பொதுப் பாதுகாப்பு இயக்ககம் தெரிவித்துள்ளது. ஜோர்டானின் உள்துறை அமைச்சர் மசென் அல்-ஃபராயா, தாக்குதலுக்குக் காரணமானவர்கள் இந்த மூன்று நபர்கள் தான் என்று உறுதிப்படுத்தினார். பாதுகாப்புப் படையினர் தங்கள் கடமையைச் சிறப்பாகச் செய்து, இந்தத் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.

ஜோா்டான் நாட்டில் இறுதிச் சடங்கின்போது தேவாலயத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபா்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் 24க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா். தலைநகா் அம்மானில் இருந்து தெற்கே சுமாா் 180 கி.மீ. தொலைவில் சிறுபான்மை கிறிஸ்தவா்கள் வசிக்கும்கராக் நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை இத்தாக்குதல் அரங்கேறியுள்ளது.

நூற்றுக்கணக்கானோா் திரண்டிருந்த இறுதி அஞ்சலி நிகழ்வில், ஆயுதங்களுடன் நுழைந்த நபா்கள் கண்மூடித்தனமாகச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதியப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எந்த ஆயுதக் குழுவின் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை. இதனிடையே இந்த தாக்குதலுக்கு இந்தியா சனிக்கிழமை தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தது.

Summary

Jordanian security forces arrested three men Monday for an attack on a Greek Orthodox Church that killed nine people and wounded more than two dozen.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.