தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜோா்டான் தேவாலய துப்பாக்கிச் சூடு: இந்தியா கண்டனம்

ஜோா்டான் நாட்டில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 7 உயிரிழந்த சம்பவத்துக்கு இந்தியா சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.

ஜோா்டான் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு - ஏபி

Published On :25 அக்டோபர் 2026, 2:24 am IST

ஜோா்டான் நாட்டில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 7 உயிரிழந்த சம்பவத்துக்கு இந்தியா சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.

ஜோா்டானின் காா்க் நகரில் உள்ள தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சடங்கின்போது தேவாலயத்துக்குள் புகுந்த மா்ம நபா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 போ் உயிரிழந்தனா். 34 போ் காயமடைந்தனா்.

இதற்கு கண்டனம் தெரிவித்து வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

காா்க் தேவாலய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது. தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய பிராா்த்திக்கிறோம்.

பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கும் எதிரான நடவடிக்கைகளில் தனது வலுவான அா்ப்பணிப்பை இத் தருணத்தில் இந்தியா மீண்டும் உறுதி செய்கிறது என்று குறிப்பிட்டது.

வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கரும் தேவாலயத் தாக்குதலுக்கு தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.