பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முறுக்கு மீசையுடன் பிறந்த குழந்தை! வைரலாகும் புகைப்படம் உண்மையா?

முறுக்கு மீசையுடன் குழந்தை பிறந்திருப்பதாக வைரலாகும் புகைப்படம் உண்மையா? என்பது பற்றி..

முறுக்கு மீசை

முறுக்கு மீசை - grab from video

Published On :26 அக்டோபர் 2026, 3:19 pm IST

சமூக வலைத்தளங்களில் ஏராளமான நகைச்சுவை விடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவை உண்மையா? செய்யறிவால் உருவாக்கப்பட்டதா? என்பதெல்லாம் எல்லாவற்றுக்கும் கண்டறிய முடிவதில்லை. கண்டறிய மக்களுக்கு நேரமும் இல்லை.

அந்த வகையில்தான், சமூக வலைத்தளங்களில் மீசையுடன் ஒரு குழந்தை பிறந்திருப்பதாக புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பிறந்த குழந்தை ஒன்று, கறு கறுவென மீசையுடன், வெள்ளைத் துணியால் பார்த்தப்பட்டிருப்பது போல வெளியாகும் படம் உண்மையா என்பது இதுவரை வெளியாயகவில்லை.

ஆனால், அதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அது குறித்து மிகவும் நகைச்சுவையாக பல்வேறு கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த குழந்தை மழலையர் பள்ளிக்குச் செல்ல வேண்டியதில்லை நேரடியாக வேலைக்குச் செல்ல வேண்டியதுதான் என்றும், சிலரோ பிறந்ததுமே இவர் வரி செலுத்துவதற்கான தகுதிகளைப் பெற்றுவிட்டார் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

கான்ஜெனிடல் ஹைபர்டிரிசோசிஸ் என்ற அரிய வகை பிரச்னையின்போது, குழந்தைகளுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் அரிதிலிம் அரிதாக நிகழும் என்று கூறப்படுகிறது.

இந்த புகைப்படம் ஈக்குவேடார் நாட்டிலிருந்து ஒரு சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பலராலும் பகிரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உண்மையில் இந்தப் படத்தைப் பார்த்தால் உண்மை என்று நம்பும்படியாக இல்லை. இது செய்யறிவில் உருவாக்கப்பட்டதாகவே தெரிகிறது. தலையில் இருக்கும் முடியைப் போல அல்லாமல் போலியாக வரைந்தது போல தெரிகிறது.

இதுவரை உலகில், மீசையுடன் குழந்தைகள் பிறந்துள்ளன என்பதை மெய்ப்பிக்கும் தரவுகள் எதுவும் இல்லை. குழந்தைகள் பிறக்கும் முன், கருவில் உடல் முழுவதும் ரோமங்கள் இருக்கும், பிறக்கும்முன் அவை உதிர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது. சில குழந்தைகள் முதுகு, தோள்பட்டைகளில் அதிக முடியுடன் பிறந்திருப்பதை பார்த்திருக்கலாம்.

Summary

A baby born with a handlebar mustache! Is the viral photo real?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.