தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!எவரெஸ்ட் அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வுஇந்தியா கூட்டணி போராட்டத்தால் 2.5 லட்சம் கடைகள் அடைப்பு, ரூ. 11,000 கோடி இழப்புசில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்த தீபாவளி சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்!கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!மணிக்கு 120 கி.மீ. வேகம்... தீவிர புயலாக கரையைக் கடந்த முரசு!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் ‘திடீர்’ ஓய்வு!முதல்வா் விஜய் இன்று பெருந்துறை வருகை!இரு மாதங்களில் அரிசி விலை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும்: அமைச்சா் காந்திராஜ்

ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு - 2: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு - 2 படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக....

Meesaya Murukku 2

மீசையை முறுக்கு 2 திரைப்படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ்

Published On :3 நவம்பர் 2026, 11:03 am IST

ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு - 2 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, இசையமைத்து நாயகனாக நடித்து 2017 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ’மீசைய முறுக்கு’. அந்தப் படத்தைத் தொடர்ந்தே, அடுத்தடுத்து பல படங்களில் ஆதி நாயகனாக நடித்து வருகிறார்.

தற்போது, நடிகை குஷ்புவின் அவ்னி மூவீஸ் தயாரிப்பில் மீசைய முறுக்கு படத்தின் இரண்டாவது பாகமான மீசைய முறுக்கு - 2 படத்தை ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ளார். இதில், இடம்பெற்ற ஆரா 10/10 ஆகிய பாடல் பெரிய ஹிட் அடித்தது.

கடந்த செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், ரூ. 51 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியது.

மேலும் இந்தப் படத்தில் கேத்திகா ஷர்மா, சைத்ரா ஆச்சர், ரம்யா ரங்கநாதன், பாபா பாஸ்கர் மாஸ்டர், கருணாஸ், யோகிபாபு, நாசர், பகவதி, விஜய் வரதராஜ், யூடியூபர் ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைத்துறையில் நிலவும் புறக்கணிப்புகளை எதிர்த்து, பாரம்பரிய கானா இசைக்கு உலகளாவிய அங்கீகாரம் தேடி மூன்று தலைமுறை இசைக்கலைஞர்கள் நடத்தும் போராட்டத்தை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மீசைய முறுக்கு - 2 படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் நவ. 6 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The OTT release date for Hiphop Adhi's Meesaya Murukku 2 has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.