மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மெக்கா, ஜெட்டா உள்ளிட்ட நகரங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை! - சௌதி அரசு அறிவிப்பு!

சௌதி அரேபியாவின் மெக்கா, ஜெட்டா உள்ளிட்ட நகரங்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை...

Saudi civil defence issues 'potential danger' warning for Mecca, Jeddah

இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மெக்கா... - கோப்புப் படம் | AP

Published On :24 அக்டோபர் 2026, 3:40 pm IST

சௌதி அரேபியாவின் மெக்கா, ஜெட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக, அந்நாட்டின் பொது பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

யேமனில், ஹௌதி கிளர்ச்சிப்படைக்கும், சௌதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரசுப்படைகளுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் வெடித்துள்ளது. மேலும், சௌதி அரேபியாவின் மீதும் ஹௌதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மெக்கா மற்றும் ஜெட்டா நகரம் உள்பட 4 மேற்கு மாகாணங்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும், மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், சௌதி அரேபியாவின் பொது பாதுகாப்பு ஆணையம் இன்று (அக். 24) எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கெனவே, சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மற்றும் தம்மாம் போன்ற நகரங்களில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களில், இந்தியர்கள் இருவர் உள்பட சுமார் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சௌதி அரேபியா உடனான விமான சேவைகளை இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சர்வதேச விமான நிறுவனங்களும் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The Saudi Arabian Ministry of Public Security has announced that there is a security threat to major cities including Mecca and Jeddah.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.